சின்னசேலம் : சின்னசேலத்தில் விநாயகர் கோவிலில் நாக சதுர்த்தி பூஜை நடந்தது. ஆர்ய வைசிய மகிளவிபாக் சார்பில், நாக சதுர்த்தி, கவுரி அம்மன் ஆவாகணம் செய்த நோன்பு கயிறு, உடன் பிறந்த சகோதரர்களுக்கு அதிக ஆயுள் வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.சுமங்கலி பெண்கள் அரச மற்றும் வேப்பமரம் அருகே உள்ள நாகர், விநாயகர், நவகண்ணி மற்றும் கவுரி அம்மனுக்கு எள் உருண்டை படைத்து, நோன்பு கயிறு அணிந்து கொண்டனர்.பூஜைகள் மகிளா சங்க நிர்வாகிகள் அகிலா, மாலா, அபி ஆகியோர் செய்திருந்தனர்.