திருக்கனுார்: திருக்கனுார் காலனி முத்துமாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. திருக்கனுார் காலனியில் முத்து மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. மாலை 4:30 மணிக்கு ஊரணி பொங்கல், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.