மன்னர் ஒருவர் தன் படைத்தளபதிக்கு மாடிவீட்டையும், முல்லா என்பவருக்கு கீழ்தளத்தையும் இலவசமாக கொடுத்தார். படைத்தளபதியின் மனைவி கல்உரலில் மாவு இடிப்பதால் எப்போதும் சப்தமாக இருக்கும். தளபதியிடம் முறையிட்டும் முல்லாவிற்கு எந்த பயனும் இல்லை. ஒருநாள் கோபமுற்ற தளபதி இது என் வீடு. என் இஷ்டப்படி என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக்கேட்க நீ யார் எனக் கத்தினார். மறுநாள் முல்லா தன் வீட்டுப்பகுதியை கடப்பாறையால் இடிக்கத் தொடங்கினார். இதைப் பார்த்த தளபதி ஏன் வீட்டை இடிக்கிறாய் எனக்கேட்டார். வீட்டை இடித்து புதிதாக கட்டப் போகிறேன் என்றார் முல்லா. நீர் என்ன முட்டாளா... கீழ்வீட்டை இடித்தால் மேல்வீடு என்றார் தளபதி. இது என்னுடைய வீடு. அதைக் கேட்க நீ யார் என கேட்டார் முல்லா. பதறிய தளபதி இனி தொந்தரவு செய்ய மாட்டேன் என மன்னிப்பு கேட்டார். இதைத் தான் முள்ளை முள்ளால் எடு என்பர்.