சதுரகிரியில் பௌர்ணமி வழிபாடு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2021 06:08
வத்ராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை என கோவில் செயல் அலுவலர் விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 31-ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறுகிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், நாளை பிப்ரவரி 20 பிரதோஷம், பிப்ரவரி 22 ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி வருவதால், தொடர்விடுமுறை காரணமாக அதிக அளவில் பக்தர்கள் கோவிலுக்கு வரலாம் என்பதால் அரசு நிர்வாகம் இம்முடிவை அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் ஆடி அமாவாசையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய முடியாததால், இந்த மாதம் சாமி தரிசனம் செய்யலாம் என எதிர்பார்த்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.