பெரியகுளம்: பெரியகுளம் தண்டுபாளையம் மகாசக்தி மகாகாளியம்மன் கோயில் திருவிழா ஆக. 9ல் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அனுகிரக ேஹாமபூஜை, சக்திகரகம், மாவிளக்கு, பொங்கல் வைத்தல் உள்ளிட்டவை நடந்தது. நேற்று ஆவணி 1 மறுபூஜையை முன்னிட்டு அம்மன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.