சாத்துார் : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது .இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்கோயிலில் அம்பிகை மண்டபம் மாரி மண்டபம் சக்தி மண்டபம் என பல்வேறு பெயர்களில் பக்தர்களுக்காக மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன . இரு ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோயில் விழாக்கள் நடைபெறாத நிலையில் மண்டபங்கள் மூடிக் கிடக்கின்றன. மண்டபங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகும் நிலையில் இதன் கூரை பெயர்ந்தும் கம்பிகள் தெரியும் வகையில் உள்ளது. உணவு அருந்தும் மேஜை, இருக்கை, கைகழுவும் வாஸ்பேஷன், தண்ணீர் தொட்டிகள் உடைந்து காணப்படுகிறது. சேதமுற்ற மண்டபங்களை சீரமைக்கவும், வர்ணம் பூசவும் ஹிந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் வரும் காலங்களில் மண்டபங்களை வாடகைக்கு பிடிக்கும் பக்தர்கள் மனம் மகிழ்ச்சி அடைவார்கள்.