திண்டுக்கல்: சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல்லில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளன.
ஹிந்துக்கள் பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கியமானது. இந்த நாளையொட்டி ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி, நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். வரும் செப்.10 ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, திண்டுக்கல் அருகே நொச்சிஓடைப்பட்டி, வேடப்பட்டியில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. இரண்டு அடி சிலைகொரோனாவால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொது இடங்களில் சிலை வைத்து வழிபட அனுமதி கிடைக்குமா என்ற சூழல் நிலவுகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபடும் வகையில் சிறியது முதல் 2 அடி உயரமுள்ள களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளன.இவை ரூ.50 முதல் ரூ.1,200 வரை சிலைகள் விற்பனைக்கு உள்ளன. திண்டுக்கல்லில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.சிலை தயாரிப்பாளர் கஜேந்திரன் கூறுகையில், களிமண், இயற்கை வண்ணம் பூசிய சிலை என்பதால் நீர் நிலைகளில் கரைத்தாலும் மாசு ஏற்படாது. கொரோனாவால் சிலை தயாரிப்பு குறைந்துள்ளது. சிறிய அளவிலான சிலைகள் மட்டுமே தயாரிக்கிறோம் என்றார்.