புதுச்சேரி: கோவிலுக்கு செல்ல பாதை கேட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை வளாகத்திற்குள் பொறையாத்தம்மன் கோவில் உள்ளது.
கோவிலில் ஏரிப்பாக்கம், நத்தமேடு கிராமத்தினர் வழிப்பட்டனர்.தொழிற்சாலை நிர்வாகம் சுற்றுச்சுவர் அமைத்ததால், கோவிலுக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது. மக்கள் கோவிலுக்கு செல்ல சிரமம் அடைந்தனர். பல போராட்டத்திற்கு பின், கோவிலுக்கு செல்ல 20 அடி பாதை அமைத்து தர தொழிற்சாலை நிர்வாகம் உறுதி அளித்ததாக தெரிகிறது.பல மாதங்கள் ஆகியும் பாதை அமைக்கவில்லை. இதை கண்டித்து, கோவிலுக்கு பாதை அமைத்து தர கோரி, அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை வளாகத்திற்குள் தர்ணாவில் ஈடுபட்டனர்.அவர்களிடம், நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி, பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை ஏற்று, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.