ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சந்தன, குங்கும, பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக நடைபெற்ற யாகசாலை பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை இந்து பேரவை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.