பதிவு செய்த நாள்
21
ஆக
2021
12:08
புதுச்சேரி: முத்தியால்பேட்டை முத்துமாரியம்மன் முத்தைய சுவாமி கோவிலின் மகா கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.முத்தியால்பேட்டையில் பிரசித்திப்பெற்ற முத்துமாரியம்மன் முத்தைய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிந்து, மகா கும்பாபிேஷகத்திற்கு தேதி குறிக்கப்பட்டு, 17ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.மகா கும்பாபிேஷகம் நேற்று காலை நடந்தது. யாகசாலையில் இருந்து காலை 8:00 மணிக்கு கடம் புறப்படாகி, முத்தைய சுவாமி ராஜகோபுரத்துக்கும், அனைத்து விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, வள்ளி தேவசேனா சமேத முத்தைய சுவாமிக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.விழாவில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.,கள் வைத்தியநாதன், பிரகாஷ்குமார், இந்து அறநிலைய துறை செயலர் மகேஷ், ஆணையர் சிவசங்கரன், அறங்காவலர் வாரிய குழு தலைவர் ஞானசேகரன், துணைத் தலைவர் உமாபதி, செயலாளர் தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.