பதிவு செய்த நாள்
21
ஆக
2021
12:08
சென்னை:தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. முதல் கட்டமாக 58 அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே, தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்தோரை பணி நிரந்தரம் செய்யாமல் புதியவர்களை நியமித்துள்ளனர். ஏற்கனவே இருந்தவர்களுக்கு, வேறு பணி வழங்கவில்லை என, பல்வேறு புகார்களும் எழுந்துள்ளன.இதை, அறநிலையத்துறை மறுத்துள்ளது. இந்நிலையில், புதிதாக அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்ட, கோவில் செயல் அலுவலர்களை, புதிய நியமனம் தொடர்பான ஆவணங்களுடன், வரும் 25ம் தேதி, சென்னையில் உள்ள அறநிலையத் துறை தலைமையகம் வருமாறு, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.