ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சி அரண்மனை முப்புடாதி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.ஆழ்வார்குறிச்சியில் சிவசைலம் மெயின்ரோட்டில் அரண்மனை முப்புடாதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு நடந்த வருஷாபிஷேக விழாவில் கும்ப ஜெபம், வேதபாராயணம், சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், விமான அபிஷேகம் ஆகிய வைபவங்கள் நடந்தது. பின்னர் சிறப்பு தீபாரதனை நடந்தது. இரவு சிறப்பு பூஜைகள் நடந்தது.