நெல்லிமரம் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறது. ‘ஹரிபலம்’ என்றும் இதற்கு பெயருண்டு. வீட்டில் நெல்லி மரம் நட்டால் லட்சுமியின் கடாட்சம் உண்டாகும். நெல்லிக்கனியை உணவில் சேர்த்தால் ஆரோக்கியம் கிடைப்பதுடன், புண்ணியமும் சேரும். நெல்லி மர நிழலில் அன்னதானம் செய்வது பன்மடங்கு புண்ணியம் தரும். திருமாலுக்குரிய ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாளான துவாதசி திதியன்று நெல்லிக்காயை உணவில் சேர்ப்பர். இரவில் மட்டும் இதை உண்பது கூடாது என்கிறது சாஸ்திரம்.