திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம் முடிந்து கவசம் சாத்துப்படியானது. பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில், ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.