கன்னிவாடி: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், ஆவணி பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. திருமஞ்சன அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மூலவர், பரிவார தெய்வங்களுக்கு, மகா தீபாராதனை நடந்தது.
* கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், காரமடை ராமலிங்கசுவாமி கோயிலில், பவுர்ணமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.