Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி ... திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தமிழ் கல்வெட்டு: கோவிலுக்கு அளிக்கப்பட்ட தானம் குறித்து தகவல் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடத்தில் கந்த சஷ்டி விழா நவ., 10ல் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடத்தில் கந்த சஷ்டி விழா நவ., 10ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

06 நவ
2026
10:11

பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ தண்டபாணி கோவிலில் வரும் 10 முதல் 16ம் தேதி வரை கந்த சஷ்டி திருவிழா நடக்கிறது.


முதல் நாளான 10ம் தேதி காலையில் ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்கந்த ஹோமம், மஹா மங்களாரத்தி; மாலையில் ஸ்ரீ சுப்ரமண்ய மூல மந்திர ஹோமம், ரிஷப வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் சுவாமி ஊர்வலம். மூல மந்திர ஹோமம், இரண்டாம் நாளான 11ல், காலையில் ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ அங்கூர பூஜை, ஸ்ரீ காங்கேய தத்புருஷா முகம், சுப்ரமண்ய ஹோமம், மஹாமங்களாரத்தி; மாலையில் ஸ்ரீ சுப்ரமண்ய மூல மந்திர ஹோமம், மயில் வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் சுவாமி ஊர்வலம். மூன்றாம் நாளான 12ல், காலையில் ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, சோம கும்ப பூஜை, ஸ்ரீகார்த்திகா அகோர முகம் ஹோமம், மூலகை ஹோமம், மஹா மங்களாரத்தி; மாலையில் ஸ்ரீ சுப்ரமண்ய மூல மந்திர ஹோமம், யானை வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் சுவாமி ஊர்வலம்.


நான்காம் நாளான 13ல், காலையில் ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, சோம கும்ப பூஜை, ஸ்ரீ விசாகா சுப்ரமண்ய ஹோமம், வாமதேவ முகம் ஹோமம், மஹாமங்களாரத்தி; மாலையில் ஸ்ரீ சுப்ரமண்ய மூல மந்திர ஹோமம், குதிரை வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் சுவாமி ஊர்வலம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கப்படுகிறது.


ஐந்தாம் நாளான 14ல், காலையில் ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ அங்கூர பூஜை, சத்யோஜதா முகம், ஸ்ரீ சுவாமிநாத சுப்ரமண்யர் ஹோமம், மஹாமங்களாரத்தி; மாலையில் ஸ்ரீ சுப்ரமண்ய மூல மந்திர ஹோமம், இந்திர விமானம் வாகனத்தில் கோவில் பிராகரத்தில் சுவாமி ஊர்வலம்.  திருக்கல்யாணம்


ஆறாம் நாளான 15ல், காலையில், ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, சோமகும்ப பூஜை, 108 வலம்புரி சங்கு அபிஷேகம், அங்கூர முகம், சுப்ரமண்ய சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல்; மாலையில் ஆட்டுக்கடா வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் சுவாமி ஊர்வலம், சூரசம்ஹாரம் நடக்கிறது. நிறைவு நாளான 16ல், காலையில் லட்சார்ச்சனை, சண்முக அர்ச்சனை, மஹா மங்களாரத்தி; மாலையில் அஜந்தா தியேட்டர் எதிரில் உள்ள விநாயகர் கோவிலில், ஸ்ரீ வள்ளி தெய்வானை அம்பாள் சுப்பிரமணியர் திருக்கல்யாணம், விக்னேஸ்வர பூஜை, ஜோதி மன்றம் அரங்கில் இருந்து ஊர்வலம் புறப்பாடு, ஊஞ்சல் வழிபாடு, மாலை மாற்றுதல், திருக்கல்யாண வைபவம், சிறப்பு தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது. விழா காலத்தில் மாலையில் சுவாமி ஊர்வலத்துக்கு பின் மஹா மங்களாரத்தி காண்பிக்கப்படுகிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க, கோவில் நிர்வாகத்தினர் கேட்டு கொண்டுள்ளனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள கல்வெட்டுகளை நகல் எடுத்து, ‘டிஜிட்டல்’ வடிவில் பாதுகாக்க, மத்திய ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஸ்ரீஹனேஷ் இன்ஜினியரிங் நவீன தேர் பட்டறை தமிழகம் முழுதும் 250க்கும் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar