Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழகத்தில் 250க்கும் மேற்பட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

06 நவ
2026
11:11

தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், வானவேடிக்கையுடன் நள்ளிரவில் கோலாகலமாக நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


வடக்கே காசி, தெற்கே தென்காசி எனப் போற்றப்படும் தென்காசி மாவட்ட நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாணத் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26ஆம் தேதி காலை உலகம்மன் சன்னதியில் எதிரே உள்ள கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றதுடன், பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 11 ஆம் நாள் திருக்கல்யாண வைபவம் இன்று நள்ளிரவு 11.30 மணிக்கு மேல் 12.30 க்குள் உலகம்மன் சன்னதி எதிரே அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க, பஞ்ச வாத்தியங்கள் இசைக்க, சங்கொலி மற்றும் வானவேடிக்கையுடன் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இவ்விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும் கட்டளைதாரர்களும் செய்திருந்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள கல்வெட்டுகளை நகல் எடுத்து, ‘டிஜிட்டல்’ வடிவில் பாதுகாக்க, மத்திய ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஸ்ரீஹனேஷ் இன்ஜினியரிங் நவீன தேர் பட்டறை தமிழகம் முழுதும் 250க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar