திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, அவரது மகள் செந்தாமரை ஆகியோர் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், முதல் முறையாக அவரது மனைவி துர்கா, நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, மகள் செந்தாமரையுடன் வந்தார். சம்பந்த விநாயகரை தரிசனம் செய்து, அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு நடந்த உச்சி கால அபிஷேகத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். ரமேஷ் குருக்கள், சமஸ்கிருதத்தில் வேத மந்திரம் முழங்க, கணேசன் ஓதுவார் தேவாரம் பாட, ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் பெயர்களுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. நவக்கிரஹ சன்னிதியை வலம் வந்து வழிபட்ட பின், கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பைரவரை தரிசனம் செய்தனர். பொதுப்பணித் துறை அமைச்சர் வேலுவின் மகன் கம்பன் உடன் இருந்தார்.