பதிவு செய்த நாள்
26
ஆக
2021
01:08
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, உடுமலையில், மகா சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகர் கோவில்களில், நேற்று சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.
விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள் வழக்கமாக நடத்தப்படுகிறது. விரதமிருக்கும் பக்தர்கள், கோவிலில், மாலையில் நடக்கும், சிறப்பு பூஜைகளில் பங்கேற்று தரிசிப்பது வழக்கம்.விநாயகர் சதுர்த்திக்கு, முன்பாக வரும், தேய்பிறை சதுர்த்தியை, மகா சங்கடஹர சதுர்த்தியாக, மக்கள் வழிபட்டு வருகின்றனர்.அவ்வகையில், நேற்று இதையொட்டி, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில், பிரசன்ன விநாயகர் அருள்பாலித்தார்.
பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை, 5:00 மணிக்கு ேஹாமம், மாலை, 5:30 மணிக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதன்பின், சிறப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமான், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், விநாயகருக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜையையொட்டி, நேற்று மாலை, 6:30 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது. பூஜையில், சுமங்கலி பாக்கியத்துக்கு பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர். சங்கடம் போக்கும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.