பதிவு செய்த நாள்
25
ஜூன்
2012
10:06
பெரியகுளம்:பெரியகுளம் அருகே மலைமேல் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, திருப்பணிளை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். பெரியகுளம் அருகே கைலாசபட்டியில், மலைமேல் கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. நூறாண்டு பழமை வாய்ந்த கோயில். இங்கு பிரதோஷம், பவுர்ணமி கிரிவலம், கார்த்திகை தீபம், மகாசிவராத்திரி உட்பட விசேஷ காலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.கோயிலில் கோபுரங்கள் அமைக்கும் பணி, ஆலயம் கட்டுமானப்ப பணி உட்பட திருப்பணிகள் நடந்து வருகின்றன. கைலாசநாதர் மலைக் கோயிலில் ஜூன் 29ல் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக சில வாரங்களுக்கு முன் கொடிமரம் நடும் விழா மற்றும் யாகசாலை முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதங்கள் ஓத கொடிமரம் நடப்பட்டது. யாகசாலை பூஜைகள் ஜூன் 27ல் துவங்குகிறது.திருப்பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. நேற்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பணிகளை ஆய்வு செய்து, வேலை செய்யும் பணியாளர்களை பாராட்டினார். கும்பாபிஷேக ஏற்பாடுகளை அ.தி.மு.க., இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் ரவீந்திரநாத்குமார், அன்பர் பணி செய்யும் பராமரிப்புக்குழு தலைவர் ஓ.ராஜா, பொறுப்பாளர் ஜெயபிரதீப், ஆலோசாகர் சரவணன், செயலாளர் சிவக்குமார், ஓதுவார்கள் தெய்வேந்திரன், கிருஷ்ணசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.