திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் விளக்கணி மாட பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2021 10:08
திருவட்டார் : திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் விளக்கணி மாட பணிகள் நேற்று பூஜையுடன் துவங்கியது. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தமிழக அறநிலையத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.6.5 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீகிருஷ்ணன், ஐயப்ப சாமி சன்னதிகளை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தீபமேற்றும் விளக்கு மாடங்கள் சேத மடைந்ததால் அவை அனைத்தும் மாற்றப்பட்டு புதியதாக விளக்கணி மாடம் ரூ.39லட்சம் செலவில் தனியார் ஒத்துழைப்புடன் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கா க தேக் கு மரச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. விளக்கணி மாட பணிகள் நேற்று பூஜையுடன் துவங்கியது. ஆதிகேசவ பெருமாள் கோயில் பாலாலயத்தில் மரச்சட்டம் கொண்டு வரப்பட்டு, விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது. விளக்கணி மாடம் அமைக்கும் பணிகள் வரும் நாட்களில் நடக்கும் என கோயில் மேலாளர் மோகன்குமார் தெரிவித்தார்.