பதிவு செய்த நாள்
27
ஆக
2021
10:08
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குவதை முன்னிட்டு, கோயில் பிரகாரத்தில் யானை மீது
கொடிப்பட்டம் உலா நடந்தது. பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்கதடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பிரசித்தி பெற்ற ஆவணி திரு விழா , இன்று ( 2 7 ம்தேதி ) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இத்திருவிழா, அடுத்த மாதம் 7ம் தி வரை நடக்கிறது. இத்திருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை 4:30 மணிக்கு தூண்டுகை விநாயகர் கோயிலில் கொடிப் பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், கோயில் இரண்டாம்படி ப்பு ஸ்தலத்தார் கிருஷ்ணமூர்த்தி தீட்சதர் யானை மீது அமர்ந்து, கொடிப்பட்டத்தை கையில் ஏந்தி கோயில் கிரிப்பிரகாரம் சுற்றி கோயிலை சேர்ந்தார். நிகழ்ச்சியில், கோயில் உதவி ஆணையர் செல்வராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து திரிசுதந்திரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆவணி திருவிழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை 5:30 மணிக்கு ல் கொடியேற்றம் நடக்கிறது. திருவிழா நிகழ்ச்சிகள் ஆகம விதிப்படி, கோயிலுக்குள் நடக்கிறது.
ஆவணி திருவிழா பக்தர்களுக்கு தடை: இதுகுறித்து, தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில், நிலவி வரும் கொரோனா நோய் தொற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவு கூடுவார்கள் என்பதால், கொரோனா பரவாமல் தடுக்கும் விதமாக, இன்று (27ம் தேதி) முதல் அடுத்த மாதம் 5ம் தி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. கோயிலில் ஆகம விதி படி அனைத்து பூஜைகள் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளும், கோயில் பணியாளர்கள் மூலம் கோயிலுக்குள் நடக்கும் .ஆவணி திருவிழாவில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளை, பக்தர்கள் வீட்டில் இருந்து இணையதளம் மூலமாக காணுவதற்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.