பீதர்: பீதரின்பால்கி அருகே உள்ள கானாபுரா அருகே குப்தலிங்கேஸ்வரா கோவில் உள்ளது. 500 ஆண்டு பழமையான கோவில். இக்கோவிலுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். அமாவாசை , பவுர்ணமியில் சிறப்பு பூஜைகள் நடக்கும். இந்த கோவில் வனப்பகுதியின் மத்தியில் உள்ளது. இக்கோவிலில் உள்ள ஊற்று இதுவரை வற்றியதே கிடையாது. கோடை காலத்திலும் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். இந்த தண்ணீரை குடித்தால் அல்லது குளித்தால் உடலில் உள்ள நோய் நீங்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. நந்தி வாயில் இருந்து ஊற்று நீர் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுத்திரிக்கப்பட்ட குடிநீர் மையம் இல்லாத காலக்கட்டத்தில் பொதுமக்கள் இங்கு வந்து ஊற்று நீரை பிடித்து சென்றனர். தற்போது அது நின்று விட்டது.