கலபுரகி: கலபுரகி அப்சல்புரா அருகே உள்ள கத்தரகி கிராமத்தில் கத்தரகி கிராமத்தில், இதுவரை யாரும் கட்டில், மெத்தையை பயன்படுத்துவதில்லை. தரையில் பாய் விரித்து தான் படுத்து துாங்குகின்றனர். யாராவது திருமணம் செய்து வந்தால் கூட சீர்வரிசையாக கட்டில், மெத்தை கொடுக்க கூடாது என்ற நடைமுறை உள்ளது. இந்த கிராமத்தில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த ஊரில் லாட் ஜ், ஓட்டல்கள் கூட உள்ளது. அங்கும் கட்டில், மெத்தை கிடையாது; பாய் தான்.
இதற்கு இக்கிராமத்தை சேர்ந்த பாக்கியவந்தி தேவி தான் காரணம் என கூறப்படுகிறது. கோவிலில் உள்ள பாக்கியவதி தேவி, இரவில் மெத்தை மீது படுத்து துாங்குவதாக நம்பிக்கை உள்ளது. அவர் மெத்தை மீது துாங்கும் போது, அவர் போலவே, நாமும் செய்வது சரியல்ல என நினைக்கின்றனர். எனவே கிராமத்தினர் யாரும் கட்டில், மெத்தையை பயன்படுத்துவது கிடையாது. இக்கிராமத்து உறவினர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கும் கட்டில், மெத்தை கொடுப்பது இல்லை. அதுபோல குடையையும் பயன்படுத்துவது இல்லை. பாக்கியவந்தி தேவி தலை மீது குடை இருப்பதால் தான் கிராமத்தினரும் பயன்படுத்துவதில்லையாம்.