ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி காந்திநகர், காமாட்சி அம்மன், சமயா கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றன. தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், கோ பூஜை, லட்சுமி பூஜை நடைபெற்றன. பின்பு யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர், கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், காமாட்சி, சமயா, ஆகிய தெய்வங்களுக்கு கும்ப நீர் ஊற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றன.