திருவெற்றியூர் : கொரோனா ஊரடங்கால் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில்கள் இன்று முதல் ஆக.29 வரை மூடப்படுகிறது. இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:கோயில்கள் வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு மூடப்படுவது கவலையாக உள்ளது. வெள்ளிக்கிழமையான இன்று மற்றும் கார்த்திகை விரதம் அனுசரிக்கும் ஞாயிற்றுக்கிழமையில் தரிசனம் செய்ய முடியாதது வருத்தமளிக்கிறது. ஆவணி, புரட்டாசி மாத சுவாமி தரிசனம் சிறப்பு என்பதால் கோயில்களை அனைத்து நாட்களிலும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.