சூலூர்: சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவில் ஆண்டு விழா நடந்தது. சின்னியம்பாளையத்தில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில் பழமையானது. இக்கோவிலில் மூன்றாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் ஆண்டு விழா துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு பதினாறு வகை அபிஷேகங்கள் நடந்தது. மகா தீபாராதனை முடிந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று வழிபட்டனர்.