Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாசுதேவநல்லூர் கோயிலில் ஆனித் ... முசிறியில் கோமாதா பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செப்பறை அழகியகூத்தர் கோயிலில் இன்று ஆனிஉத்திர விழா தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2012
10:06

திருநெல்வேலி: ராஜவல்லிபுரம் செப்பறை (தாமிரசபை) அழகியகூத்தர் கோயிலில் ஆனி உத்திர திருமஞ்சன திருவிழா தேரோட்டம் இன்று(25ம்தேதி) நடக்கிறது. பஞ்சசபைகளில் தாமிரசபை செப்பறை தலம் மகா விஷ்ணு, அக்னி பகவான், அகத்தியர், மணப்படை வீடு அரசனுக்கு சிவபெருமான் நடன தரிசனம் அளித்த சிறப்புடையது. நெல்லை பகுதியில் வேறு எங்கும் நடக்காத வகையில் சிதம்பரம் கோயிலை போல செப்பறை கோயிலில் ஆனி உத்திர திருமஞ்சன திருவிழா ஆண்டுதோறும் நடக்கிறது. இந்த ஆண்டு திருவிழா 17ம்தேதி துவங்குகியது. திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், நடன தீபாராதனை, உட்பிரகார வீதியுலா நடக்கிறது.

இன்று தேரோட்டம்: 9ம்திருநாளான இன்று மதியம் 12 மணிக்கு மேல் 12.15 மணிக்குள் அழகியகூத்தர் தேருக்கு எழுந்தருளுகிறார். 12.30 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. கோயிலை சுற்றி தேர் வலம் வருகிறது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். அன்னதானம் நடக்கிறது. நாளை ஆனித்திருமஞ்சனம் நடக்கிறது. சுவாமிக்கு காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், மதியம் 1 மணிக்கு நடன தீபாராதனை, சுவாமி வீதியுலா, இரவு 7 மணிக்கு பிற்கால அபிஷேகம், 8 மணிக்கு அலங்கார தீபாராதனை, அழகியகூத்தர் தாமிரசபைக்கு எழுந்தருளல் நடக்கிறது.ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், தக்கார் சுப்புலட்சுமி, மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar