முசிறி: முசிறியில் இயற்கை நல்வாழ்வு மையம் சார்பில் கோமாதா பூஜை நடந்தது. உலக மக்கள் அமைதியுடன் வாழவும், பருவகாலங்களில் பருவமழை பெய்ய வேண்டியும் நடந்த கோமாதா பூஜைகளுக்கு, கோவை இந்திய இன பசு வளர்ப்போர் சங்கத்தின் அமைப்பாளர் அன்புசுந்தரானந்த சுவாமிகள் தலைமை வகித்து, அலங்கரிக்கப்பட்ட பசு மாட்டிற்கு மாலை அணுவித்து பூஜைகளை நடத்தினார். பூஜையில் முசிறி தொழிலபதிபர்கள் சதாசிவம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா, சின்னசாமி கவுண்டர், இயற்கை ஆர்வலர் சுப்பிரமணி, மலைவாழ்மக்கள் நல அமைப்பை சேர்ந்த சின்னதுரை, பசுமை அமைப்பை சார்ந்த கவிதா, லதா, சாந்தி, ஜான்சி உள்பட பலர் பங்கேற்னர். ஏற்பாடுகளை இயற்கை நல அமைப்பாளர் யோகநாதன் செய்திருந்தார்.