மதுரை--விநாயகர் சதுர்த்தி விழாவை, திட்டமிட்டபடி நடத்துவதில் உறுதியாக இருக்கிறோம், என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அளித்த பேட்டி:விநாயகர் சதுர்த்தி விழா திட்டமிட்டபடி நடைபெறும். ஊரடங்கு தளர்த்தப்பட்டு பள்ளி, கல்லுாரிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், தடை இருக்காது என நம்புகிறோம். விநாயகர் சிலை வைத்து வழிபட உறுதியாக உள்ளோம். கோவில்களில் கூட்டம் சேருகிறது என காரணம் காட்டி, முக்கிய நாட்களில் கோவில்களை அடைப்பதை தவிர்த்து மதுக்கடைகளை அடைக்க முன்வரலாம். கோவில் வருமானத்தில் பெரிய ஊழல் நடக்கிறது என தொடர்ந்து கூறி வருகிறோம். அப்படி இல்லை என அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார். அது உண்மையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.