திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2021 09:09
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. நேற்று இரவு 10:00 மணிக்கு நந்தன கிருஷ்ண, தொட்டிலில் சந்தான கோபால கிருஷ்ணன் எழுந்தருளினர். தொடர்ந்து இருவருக்கும் சிறப்பு பூஜைகள் திருவாராதனை பூஜைகளும் நடந்தது. இரவு 12:00 மணிக்கு கண்ணன் பிறப்பு வைபவம் நடந்தது. நாலாயிர திவ்ய பிரபந்த சாத்துமுறை நடந்து கண்ணன் சன்னதி எழுந்தருளல் நடந்தது. ஏற்பாட்டினை நாலுவட்டகை யாதவ சங்கம், கிருஷ்ண ஜெயந்தி விழாக்குழுவினர் செய்தனர்.