கோபி: விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா நம்பியூரில் கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் இளங்கோவன், நம்பியூர் ஒன்றிய தலைவர் சாமிநாதன், ஒன்றிய செயலாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணர் சிலைக்கு அலங்காரம் செய்து, 20க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோமாதா பூஜை செய்து வழிபட்டனர்.