பதிவு செய்த நாள்
03
செப்
2021
04:09
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் இந்து முன்னணி கிழக்கு நகர் சார்பில், சேரன் நகர் செல்லும் வழியில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் கற்பூரம் ஏற்றி, விநாயகர் சதுர்த்தி விழா தடை நீங்க வேண்டும். தமிழக அரசுக்கு நல்ல புத்தியை கொடு எனவும் வேண்டிக் கொண்டனர். இந்நிகழ்ச்சி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமையில், துணைத் தலைவர் காளியப்பன், பொது செயலாளர் பிரகாஷ், பொருளாளர் பாலாஜி, சுரேஷ்குமார் மற்றும் இந்து இளைஞர் அணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
இதேபோன்று, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா தடை நீங்க வேண்டும் என, மேட்டுப்பாளையம் வடக்கு நகர் இந்து முன்னணியினர், தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில், மாநில துணை தலைவர் தங்கவேல், பொறுப்பாளர்கள் தேவன், தனபால், சந்தோஷ் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.