கடலாடி: கடலாடி அருகே மங்களம் கிராமத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. பாலதேவதை, வில்வஜோதி அம்மன் அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட விநாயகர், பால தேவதை வில்வஜோதி அம்மன், கிருஷ்ணாம்பிகை, கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை 10:30 மணி அளவில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் முக கவசம் அணிந்து நிலையில் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. கோயில் நிர்வாகி முத்துராமலிங்கம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.