பாவங்களின் தண்டனைக்கேற்ப தான் தண்டனை நிர்ணயிக்கப்படும். நியாயமான ஒன்றுக்காக பாவம் செய்ய நேர்ந்தால், அது புண்ணியக்கணக்கில் சேரும் என்கிறார் வாரியார் சுவாமி. நல்ல எண்ணத்தோடு செய்த பாவம் புண்ணியமாகும். நள்ளிரவில் ஒரு தம்பதியர் செல்கின்றனர். ஒரு பெண் போட்டிருந்த நகைக்காக பெண்ணைக் கொலை செய்து ஒருவன் திருடுகிறான். அந்தக் கொலை பாவமானது. ஒரு கணவனும், மனைவியும் செல்லும்போது, பத்துபேர் வழி மறிக்கிறார்கள். அந்தப் பெண்ணிடம் நகையைப் பறிக்கமுயல்கிறார்கள். அப்போது ஒரு பலசாலி வந்து, அந்த பத்து பேரையும் அடித்துக் கொன்று விட்டு, அவர்களைக் காப்பாற்றுகிறான். பத்து கொலை பாவமாகாமல் புண்ணியமாகிறது. செய்யும் செயலின் தன்மைக்கேற்ப தான் பாவம் புண்ணியம் ஆகிறது, என்கிறார் அவர்.