தேவகோட்டை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேவகோட்டை ஜீவா நகரில் மை இந்தியா கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் சுரேஷ் வீட்டின் முன்பம், போலீஸ் ஸ்டேஷன் எதிர்புறம் உள்ள வீட்டின் முகப்பில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேசனும் இரண்டு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்திருந்தனர்.சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.நேற்று. பகலில் ஜீவா நகரில் மைஇந்தியா கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் சுரேஷ் வீட்டு முகப்பில் வைத்து இருந்த விநாயகர் சிலையை மோட்டார் சைக்கிளில் வழக்கமாக கரைக்கப்படும் கருதாவூரணியில் பூஜைகள் செய்தபின் விநாயகரை கரைத்தனர். அவருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் நகர செயலாளர் வீரையா உடன் வந்தார்.
மாலையில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேசன் தலைமையில் மோட்டர் சைக்கிளில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். கருதாவூரணி சென்று பூஜைகளை தொடர்ந்து விநாயகர் பற்றியும் , இந்து முன்னணி பற்றியும் கோஷங்கள் எழுப்பி ஊரணியில் விநாயகர் சிலையை கரைத்தனர். நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். துரைராஜ், ராஜேஷ் , பா.ஜ.க. வடிவேல், ராம்குமார் , மைஇந்திய கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் சுரேஷ், வி.எச்.பி. நகர செயலாளர் வீரையா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.