பதிவு செய்த நாள்
11
செப்
2021
07:09
திருப்பூர் : திருப்பூரில், விநாயகர் சதுர்த்தி விழாவை, பொதுமக்கள், பக்திப்பெருக்குடன் கொண்டாடினர். வீடுகளில், சிலை வைத்து வணங்கி, வழிபட்டனர். கோவில்களில், விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. திருப்பூர் மாவட்டத்தில், நேற்று விநாயகர் சதுர்த்தி விழா, உற்சாகத்துடனும், பக்திப்பெருக்குடனும் கொண்டாடப்பட்டது. தொற்று தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களில் கொண்டாட, தமிழக அரசு தடை விதித்திருந்தது. வீடுகளில், விநாயகர் சிலைகளை அலங்கரித்து, சிலைக்கு, அவல், பொரி, கொழுக்கட்டை, மோதகம், சுண்டல், பழவகைகள் படைத்து, பக்தர்கள் வழிபட்டனர்.திருப்பூரில் பல்வேறு இடங்களில், பொது இடங்களுக்கு பதிலாக, வீடு மற்றும் கோவில் வளாகங்களில், சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.
தாசில்தார், துணை தாசில்தார், நில வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று மாலை வரை, தொடர்ந்து, கண்காணிப்பு பணியில் இருந்தனர். தடையை மீறி சிலை வைக்க, அனுப்பர்பாளையம், வேலம்பாளையம் பகுதிகளில், பொது இடங்களில் பந்தல் அமைத்த போது, நேரில் சென்று தடுத்தனர்.
கோவில்களில்சிறப்பு பூஜை: வீடுகள் மட்டுமல்லாது, விநாயகர் கோவில்களிலும், சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில்களில், மண்ணில் செய்த விநாயகர் சிலைகளை வைத்து, கணபதி ேஹாமத்துடன் சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு, அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. விநாயகரை தரிசனம் செய்த பக்தர்களுக்கு, அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.திருப்பூர், ராம்நகர் வரசக்தி விநாயகர், லட்சுமி நகர் செல்வ விநாயகர், மேட்டுப்பாளையம் செல்வ விநாயகர், டவுன்ஹால் செல்வ விநாயகர், வெங்கடேஸ்வரா நகர் யோக விநாயகர் கோவில், எஸ்.ஆர்., நகர் நவகிரக ரத்தினவிநாயகர்; அவிநாசிலிங்கம்பாளையம், சுந்தரமூர்த்தி விநாயகர், திருப்பூர் பெருமாள் கோவில் வீதி, குபேரவிநாயகர் கோவில், கொடுவாய் செல்வ விநாயகர் கோவில் உட்பட, அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜையும், கணபதி ேஹாமம் மற்றும் லட்சுமி ேஹாம வழிபாடும் நடந்தது. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் ரவுண்டானா அருகே உள்ள, பெரியவிநாயகர் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில், யாகசாலை பூஜைகளும், கும்பாபிேஷகமும் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு
திண்டுக்கல்-திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.திண்டுக்கல் வெள்ளை விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், நன்மை தரும் 108 விநாயகர், மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர், சத்திரம் தெரு செல்வ விநாயகர், நேருஜி நகர் நவசக்தி விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது.கொரோனா கட்டுப்பாடால் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கோயில் வாயிலில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தனியார் கோயில்களில் கொரோனா விதிகளை பின்பற்றி அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வீடுகளில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து, பழங்கள், கொழுக்கட்டை, அவல், பொரி வைத்து வழிபட்டனர்.பழநி: ஹிந்து முன்னணி சார்பில் பாலசமுத்திரம், மானூர், நெய்க்காரப்பட்டி பழநி நகரம் பகுதிகளில் 51 சிலைகள் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டன. அவற்றை மாலையில் போலீசார் பாதுகாப்புடன் இருசக்கர வாகனம், ஆட்டோக்களில் கொண்டு சென்று சண்முக நதியில் கரைத்தனர். கோட்ட செயலாளர் பாலன். பொதுச்செயலாளர் ஜெகன், பொருளாளர் அருண், செயலாளர் அருண், துணைத் தலைவர்கள் பிரவீன், ராஜா, ராஜசேகர், ரகு பங்கேற்றனர்.
கன்னிவாடி: தருமத்துப்பட்டி காரமடை ராமலிங்க சுவாமி கோவிலில், விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது.
சிறப்பு மலர் அலங்காரத்துடன், தீபாராதனை நடந்தது. கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.