கடலுார்: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலுார் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்திப்பெற்ற தேவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. வரும் 21ம் தேதி வரை நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் சுவாமிக்கு திருமஞ்சனமும், காலை மற்றும் மாலையில் ஸ்ரீதேவி பூதேவி ச கிதமாக தேவநாதபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உள்புறப்பாடும் நடக்கிறது.