சாக்லெட், இனிப்பு பண்டங்களை அடிக்கடி தின்னும் குழந்தைகள் சோறு சாப்பிட அடம் பிடிப்பர். அக்குழந்தைகளை விநாயகர் கோயிலுக்கு அழைத்துச் சென்று தொப்பையுடன் காட்சி தரும் விநாயகரைக் காட்டி, “ அம்மா சொல்லைத் தட்டாமல் கேட்கும் குழந்தை இது. அவங்க அம்மா கொடுக்கிற மோதகம், தயிர்ச்சாதம், அவல், பொரி என சத்தான உணவுகளாகச் சாப்பிட்டு குண்டாக இருப்பதை பார்...’’ என்று சொல்லி வழிபாடு செய்யுங்கள். இதனால் நம் வீட்டு குழந்தைகளின் மனதில் பக்தி, பண்பு, அன்பு ஆகிய நற்குணங்கள் வளரும். அதன்பின் அவர்கள் விருப்பமுடன் சோறு சாப்பிடத் தொடங்குவர்.