சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 100 ஆண்டு பழமையான அரசமரம் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவனின் அம்சமான இதனடியில் வலம்புரி விநாயகர் கோயில் உள்ளது. தேய்பிறை சங்கடஹர சதுர்த்தியன்று இங்கு சந்தனக்காப்பு நடக்கும். ‘சர்வ ஜன சுகினோ பவந்து’ என்னும் நோக்கமுடன் உயிர்கள் எல்லாம் நலமுடன் வாழ தினமும் அதிகாலை 4:30 மணிக்கு தீபமேற்றப்படுகிறது. பக்தர்கள் பயன் பெறும் விதத்தில் தினம் ஒரு பொன்மொழி இங்கு எழுதி வைக்கின்றனர். படிப்பு, வேலைவாய்ப்பு, திருமணம், பணம், பதவி உயர்வு என தேவை எதுவானாலும் இந்த விநாயகர் நிறைவேற்றுவார்.