நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ‘கள்ள வாரணப் பிள்ளையார்’ அருள்புரிகிறார். இவரை ‘சோர கணபதி’ என்றும் சொல்வர். பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்க விஷ்ணு முடிவு செய்தார். விநாயகரை பூஜிக்காமல் ஒருசெயலைத் தொடங்கலாமா....ஆனால் தொடங்கினார்கள். இதனால் கோபமான விநாயகர், அந்த அமிர்த குடத்தை எடுத்து ஒளித்து வைத்தார். ஒளித்து வைத்த இடம் அமிர்தகடேஸ்வரர் கோயிலானது; ஒளித்து வைத்த விநாயகர் ‘கள்ளவாரண பிள்ளையார்’ ஆனார். ஒளித்து வைக்கப்பட்ட அமிர்தக் குடமே சிவலிங்கமாக மாறி ‘அமிர்தகடேஸ்வரர்’ ஆனது.