நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப்பெற்ற பாதாள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை,வெளிப்பாளையம் ரயிலடித்தெருவில் அமைந்துள்ளது பாதாளமாரியம்மன் கோவில்.பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 5 ம் தேதி,அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது,தொடர்ந்து நேற்று காலை லெட்சுமி கணபதி வழிபாடு,யாக சாலை வேள்விகள் மற்றும் கடம் புறப்பாடு நடந்தது.பின் விநாயகர், முருகன், பாதாளமாரியம்மன் சன்னதி விமானங்களுக்கு,கணேச சிவாச்சாரியார்கள் தலைமையில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின் விமானங்களுக்கு சிறப்பு தீபாரதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.