வாசுகி தீர்த்த குளத்திற்கு விமோசனம் எப்போது? தோஷம் கழிக்க வரும் பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2021 05:09
நயினார்கோவில் : நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் எதிரில் உள்ள வாசுகி தீர்த்தக்குளத்திற்கு தோஷம் கழிக்க வரும் பக்தர்கள் குளம் அசுத்தமாக இருப்பதால் விமோசனம் கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர்.
மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற சிறப்பு பெற்ற நயினார்கோவிலில் சவுந்தர்ய நாயகி சமேத நாகநாதசுவாமி கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்த வருவர்.கோயில் எதிரிலுள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடுவது வழக்கம். கடந்த சில வருடங்களாக குளம் கழிவு நீர் நிரம்பி குப்பையால் சூழப்பட்டுள்ளது. குளத்தைச் சுற்றி குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீரை கலக்கும்படி விட்டுள்ளனர்.ஆங்காங்கே படிக்கட்டுகள் உடையும் தருவாயில் குளத்திற்குச் செல்ல முடியாமல் பக்தர்கள் தடுமாறும் சூழல் உள்ளது.