பிறரிடம் இருந்து வாங்க, கொடுக்க முடியாத பொருள் ‘நேரம்’. கடிகாரம் எப்படி நிற்காமல் ஓடுகிறது என்பதை கவனியுங்கள். சிலரோ ‘நேரம் வேகமாக போகுது’ என்று சொல்வர். ஒன்பது மணிக்கு துவங்கும் அலுவலகத்திற்கு எத்தனை பேர் சரியான நேரத்தில் செல்கிறார்கள். ‘பத்து நிமிடம் தாமதமாக போனால் ஒன்றும் குடிமுழுகாது’ என பலர் நினைக்கிறார்கள். ‘தாமதமாக செல்வதை விட பதினைந்து நிமிடம் முன்பே செல்லுங்களேன்’ என்கிறார் ஷேக்ஸ்பியர். நேரம் தவறாமையை அவர் எந்த அளவுக்கு மதித்தார் என்பதற்கு இதுவே சாட்சி. சொன்ன நேரத்தில் வருவது, சொன்ன நேரத்தில் வேலையை முடித்துக் கொடுப்பது இவையெல்லாம் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். இதுவே வெற்றிக்கான ரகசியம். (வாழத் தெரிந்தவரே நேரத்தை கடைபிடிப்பார்.)