பதிவு செய்த நாள்
26
செப்
2021
03:09
சின்னாளபட்டி : புரட்டாசி இரண்டாவது சனிவாரத்தை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், வலது கையில் விஸ்வநாதலிங்கம், இடது கையில் சொர்ண லிங்கத்துடன் பச்சைமேனி மாருதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்ஸவர் கோதண்டராமருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சனிவார சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது.மேலக்கோட்டை அம்பாத்துரை ரோடு ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு திரவிய அபிேஷகத்துடன், வெண்ணெய் காப்பு, துளசி மாலை அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. பிருந்தாவனத்தோப்பு லட்சுமிநாராயண பெருமாள் கோயிலில், ராஜ அலங்காரத்துடன் சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.கன்னிவாடி: நவாப்பட்டி ரோடு கதிர்நரசிங்கபெருமாள் கோயிலில், மூலவருக்கு விசேஷ அலங்காரத்துடன், அபிேஷக ஆராதனைகள் நடந்தது.கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கபெருமாள் கோயிலில், மூலவர், உற்சவருக்கு திரவிய அபிேஷகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் சனிவார பூஜைகள் நடந்தது.