பதிவு செய்த நாள்
26
செப்
2021
03:09
ராமநாதபுரம்: புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை மற்றும்மாத கார்த்திகையை முன்னிட்டு, ராமநாதபுரம் பகுதியில் உள்ள முருகன் மற்றும் பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிேஷக, அலங்காரத்தில் பூஜை நடந்தன. தரிசனத்திற்கு அனுமதியில்லாததால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு பக்தர்கள் அனுமதிக்குதடை விதிக்கப்பட்டுஉள்ளது. நேற்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் கோதண்டராமர் கோயில், திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள்கோயில், முத்தாலம்மன் பாமா, ருக்மணி சமேத கிருஷ்ண பரமாத்மா, அழகன்குளம்ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ணன் கோயில் ஆண்டாள் சமேத பெருமாள், ராதா, ருக்மணிசமேத கிருஷ்ணர் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிேஷக அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. தரிசன தடையால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கார்த்திகையை முன்னிட்டு, குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி, குமரய்யாகோயில், வழிவிடுமுருகன்கோயில் ஆகியவற்றில் பக்தர் இன்றி அபிேஷக, வழிபாடு நடந்தது. கலெக்டர் அலுவலகம்அருகேயுள்ள வினைதீர்க்கும் வேலவர் கோயில் சிறப்பு அபிேஷக, வழிபாடு நடந்தது. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் பங்கேற்றனர்.