6 மாதம் பின்.. ராமேஸ்வரம் கோயிலில் இன்று முதல் ஸ்படிகலிங்க பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2021 09:09
ராமேஸ்வரம்: 6 மாதத்திற்குப் பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று முதல் (செப்., 27) ஸ்படிக லிங்க பூஜை நடக்க உள்ளது. கொரோனா ஊரடங்கினால் கடந்த மார்ச் 24 முதல் ராமேஸ்வரம் கோயிலில் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பின் கொரோனா தாக்கம் குறைந்ததும் ஜூலை 5ல் கோயில் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் கோயிலில் அதிகாலை 5 முதல் 6 மணி வரை நடக்கும் ஸ்படிகலிங்கம் பூஜை, கோயிலுக்குள் புனித நீராட அரசு தடை விதித்தது. இந்நிலையில் இன்று முதல் ஸ்படிகலிங்க பூஜை நடத்த இந்து அறநிலை துறை உத்தரவிட்டது. அதன்படி 6 மாதம் பின் இன்று முதல் தினசரி காலை 5 முதல் 6 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடக்க உள்ளது. இதில் பக்தர்கள் கட்டண ரசீதுடன் பங்கேற்று தரிசிக்கலாம் என கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.