சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் தேர் பாதுகாப்புக்காக தகர செட்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2021 05:09
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேருக்கு தகர செட் அமைக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் பிரசித்தி பெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தேரோட்டம் காண வருவர். தேரோட்டத்தின் முடிவில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி சிறப்புக்குரியது. இக்கோயில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. கோயில் தேருக்காக ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தகர செட் பழுதடைந்த நிலையில், புதிய செட் அமைக்க பக்தர்கள் வலியுறுத்தினர். திருப்பணிக்குழு தலைவர் ராம.அருணகிரி முயற்சியால் சுமேகா இம்பெக்ஸ் நிறுவனத்தினர் 3 லட்ச ரூபாய் செலவில் துருப்பிடிக்காத தகர செட் அமைத்து கொடுக்க முன்வந்தனர். இதைத்தொடர்ந்து தகஅ செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கோயில் திருப்பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்படும் என்று திருப்பணி குழுவினர் தெரிவித்தனர்.