பெங்களூரு: சிக்கமகளூரின் பிரசித்தி பெற்ற தத்த பீடத்தில் பூஜை செய்வதற்காக முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரை நியமித்து, கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை, உயர்நீதிமன்றம் ரத்து
சிக்கமகளூரு மாவட்டத்தின், பாபாபுடன் கிரிமலையில், ஸ்ரீகுரு தத்தாத்ரேயா பீடத்தின் கோவில் அமைந்துள்ளது. புகழ் பெற்ற ஆன்மிக தலமாக உள்ளது. ‘தத்த பீடம்’ என்று அழைக்கப்படும். ஆண்டுதோறும் அப்பகுதியை சேர்ந்த ஹிந்துக்கள் மாலை அணிந்து பாத யாத்திரையாக இங்கு சென்று வழிபடுவது வழக்கம். ஆனால், சித்தராமையா முதல்வராக இருந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில், 2018, மார்ச் 19ல், தத்த பீடத்தில் பூஜை செய்வதற்கு முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த முஜாவர் என்று அழைக்கப்படுபவரை நியமித்து அரசு உத்தரவிட்டது. ஹிந்து கோவிலுக்கு, முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரை பூஜைக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, ஸ்ரீகுரு தத்தாத்ரேயா பீட கோவில் சம்வர்த்த னா சமிதி, 2018 ஏப்ரலில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், 2021 ஆகஸ்டில் விசாரணையை முடித்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், முஜா வரை நியமித்து 2018ல் அரசின் உத்தரவை நீதிபதி தினே ஷ்குமார், நேற்று ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பு அளித்தார். இந்த பிரச்னையை புதிதாக கருதி, சட்டப்படி சரியான முடிவை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டார். உயர்நீதிமன்ற தீர்ப்பு ஹிந்துக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கமகளூரில் இனிப்பு ஊட்டி பா .ஜ.,வினர் ஆரவாரம் செய்தனர்.