சிலர் குடும்பங்களில் திருமணத்தடை, குழந்தையின்மை, நிம்மதியின்மை என ஏதாவது ஒரு பிரச்னை தொடர்ந்தபடி இருக்கும். முன்னோருக்கு திதி, தர்ப்பணம் சரிவர செய்யாததால் ஏற்பட்ட பிதுர் சாபம் இதற்கு காரணமாக இருக்கலாம். இதிலிருந்து விடுபட்டு நிம்மதி பெற சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சிவன் பூவனநாதரை தரிசித்து வாருங்கள். காசியைச் சேர்ந்த தர்மயக்ஞன் என்பவர் தன் தந்தையின் அஸ்தியைக் கரைக்க ராமேஸ்வரம் சென்றார். உறவினர் ஒருவரும் அவருடன் புறப்பட்டார். வழியில் சிவத்தலமான திருப்புவனத்தில் அவர்கள் ஓய்வு எடுத்தனர். அங்கு உறவினர் அஸ்தியை பார்த்த போது அது பூவாக மாறியிருந்தது. ஆனால் அதை தர்மயக்ஞனிடம் தெரிவிக்கவில்லை. ராமேஸ்வரத்தை அடைந்த பின் கலசத்தை திறந்த போது பூக்கள் மீண்டும் அஸ்தியாக இருந்தது. உடனே உறவினர் திருப்புவனத்தில் தான் கண்டதை தர்மயக்ஞனிடம் தெரிவித்தார். வியந்த அவர் அஸ்தியுடன் மீண்டும் இத்தலத்திற்கு வந்தார். மீண்டும் அஸ்தி பூவாக மாறியிருந்தது. அதை வைகையாற்றில் கரைத்து விட்டு கோயிலில் மோட்ச தீபம் ஏற்றினர். காசியை விட 16 மடங்கு புண்ணியம் மிக்க இங்கு சுவாமி திருப்பூவனநாதர் என்றும், அம்மன் சவுந்திர நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். திதி, தர்ப்பணத்தை இங்கு செய்தால் முன்னோர்கள் நற்கதி அடைவர். அவர்களின் ஆசியால் குடும்பம் தழைக்கும். திருப்புவனத்தில் பொன்னனையாள் என்னும் பெண் வாழ்ந்தாள். சிவபக்தையான அவள் பூவனநாதருக்கு தங்கச்சிலை செய்ய ஆசைப்பட்டாள். இதை நிறைவேற்ற சித்தர் வடிவில் சிவபெருமானே அவளது வீட்டுக்கு வந்தார். ரசவாதத்தால் செம்பு பாத்திரங்களை தீயில் இட்டால் பொன்னாக மாறும் என்றும் தெரிவித்தார். பொன்னனையாளும் அவ்வாறே செய்து தங்கச்சிலையை உருவாக்கினாள். சிலையின் அழகில் மயங்கி அதன் கன்னத்தை கிள்ளினாள். அந்த நகக்கீறலை இக்கோயிலில் உள்ள உற்ஸவர் சிலையில் காணலாம். திருஞான சம்பந்தர் இங்கு வந்த போது வைகை ஆறு எங்கும் சிவலிங்கமாக தெரிந்ததால் கால் வைக்க அஞ்சினார். ஆற்றின் மறுகரையில் நின்றபடியே தேவாரம் பாடினார். அப்போது சன்னதியில் சிவலிங்கத்தை மறைத்து நின்ற நந்தி சற்று விலகியது. அதன்படி இப்போதும் நந்தி விலகியே உள்ளது. செல்வது எப்படி? மதுரை – ராமேஸ்வரம் செல்லும் ரோட்டில் 18 கி.மீ.,